தமிழ்நாடு

டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் - துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு !

பொறியியல் உயர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகமே நடத்துமென்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.

டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் -  துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பொறியியல் உயர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான டான்ஸெட் தேர்வுகளை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும். இன்று மாலை இது குறித்த அறிவிப்பு வெளியாகும். டான்ஸெட் தேர்வுக்கான விளம்பரம், இந்த வார இறுதிக்குள் வெளியாகும்.

டான்ஸெட் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம், இன்று காலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், டான்ஸெட் அட்டவணை குறித்தும் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. டான்ஸெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு, மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் (GATE) தேர்வு எழுதியவர்களும் டான்செட் தேர்வு எழுதலாம் என்றார்.

மேலும், பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. சில மாணவர்கள், மேற்படிப்பு படிப்பதால் பயன் இல்லை என்று எண்ணுகின்றனர், சிலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், மேலும், பொறியியல் படித்தவர்களுக்கு இந்தியாவில் முறையான வேலை வாய்ப்பு ஏற்படுவதில்லை எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories