தமிழ்நாடு

அதி தீவிர பாதுகாப்பு வளையத்தில் அரவக்குறிச்சி தொகுதி!

தேர்தல் நடைபெறும் நாள் அன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது 

அதி தீவிர பாதுகாப்பு வளையத்தில் அரவக்குறிச்சி தொகுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக ஏப்.,18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கவுள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 29 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் நிறைந்தவை என தெரியவந்துள்ளது.

இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிக்கும் வகையில் 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருச்சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்பெனி படையினரின் பாதுகாப்பு பணியை தொடங்கி வைத்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.
கம்பெனி படையினரின் பாதுகாப்பு பணியை தொடங்கி வைத்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

இதேபோல், 8 தமிழக தொழில் பாதுகாப்பு படையினர் 560 பேரும், 5 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 240 பேரும், ஊர்க்காவல் படையினர் 500 பேரும், ஆயுதப்பட போலீசார் 1,773 பேரும் தேர்தல் நடைபெறும் நாளன்று தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர, புகார்கள் ஏதும் தெரிவிப்பதற்காக 1950 மற்றும் 100 ஆகிய டோல்ஃபிரி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையமான கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்புடன் சேர்த்து, திருச்சி மாவட்ட போலீசார் 120 பேரும் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories