தமிழ்நாடு

சங்கம் அமைத்ததால் 8 பேர் டிஸ்மிஸ் - மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சங்கம் அமைத்ததால் 8 பேர் டிஸ்மிஸ் - மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனையில், மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு வேண்டும், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகவே சென்னை மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தது.

ஆனால், ஊழியர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத மெட்ரோ நிர்வாகம் கோரிக்கைகளை வலியுறுத்திய பணியாளர் சங்க நிர்வாகிகள் 8 பேரை சட்ட விதிகளுக்கு எதிராக மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம் உருவாக்கியதாக இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்தது.

இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தங்களை அதிக நேரம் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சங்கம் அமைத்ததால் 8 பேர் டிஸ்மிஸ் - மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

மெட்ரோ நிர்வாகம் தங்களை அடிமை போல நடத்துவதாகவும், நியாயத்திற்காக குரல் எழுப்பியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் குடும்பத்தினரும் மெட்ரோ அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories