தமிழ்நாடு

அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

இரு சக்கர வாகனங்களில் அதிக அளவில் சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர் பொருத்தியிருக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வாகனங்கள் பெருகிவிட்ட இந்த சூழலில் பல வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்துகின்றனர். சைலசர்களை பிரத்யேகமாக மாற்றம் செய்து அதிக சத்தத்தோடு வாகனங்களை இயக்குகின்றனர். அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களால் பலர் எரிச்சலடைகின்றனர். அதுமட்டுமின்றி வானங்களை வேகமாக இயக்குவதால் பலர் விபத்துக்குள்ளாகின்றனர். பல உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் பத்திரிகை செய்தி வெளியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; வேலூர் மாவட்டத்தில் சிலர் வாகனத்தில் உள்ள சைலன்சர்களில் அதிக சத்தம் வரும் வகையில் மாற்றம் செய்து, அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் ஒலிப்பான்களை பொருத்தி அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பொது இடங்களில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகளும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், பாதசாரிகளுக்கு எரிச்சலையும் எற்ப்படுத்துவதாக தெரியவருகிறது.

எனவே, அத்தகைய நபர்களைக் கண்டறிந்து அவ்வாகன ஓட்டிகளின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. மேலும் இம்மாதிரியான வழக்குகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை ஓட்ட வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories