தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தபோது தேர்தல் ஆணையம் வியாபாரிகளிடம் கைப்பற்றிய பணத்தை நிபந்தனைகள் இன்றி திருப்பி அளிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல இடங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், வியாபாரிகளின் பணம், பொருட்களைக் கைப்பற்றும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டது.
இதுபோலவே வருகிற 4 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாட்டிற்குப் பிறகு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
வருகின்ற அரசு கடந்த அரசைப் போன்று செயல்படாமல், வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார் விக்கிரமராஜா.