தமிழ்நாடு

புதுக்கோட்டையில் தொடரும் போராட்டம்: பொன்னமராவதி உட்பட 49 கிராமங்களுக்கு 144 தடை

புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு 

புதுக்கோட்டையில் தொடரும் போராட்டம்: பொன்னமராவதி உட்பட 49 கிராமங்களுக்கு 144 தடை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசி சமூக வலைதளத்தில் பரவ விட்டதால், இதனை அறிந்து ஆத்திரமடைந்த மாற்றுச் சமூகத்தினர் அவதூறாக பேசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு தொடர்ந்து பொன்னமராவதி, குழிபிறை உள்ளிட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் கிராம பகுதிகளில் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றமான சூழலே ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தும் தங்களது எதிர்ப்பை மாற்று சமூகத்தினர் தெரிவித்து வந்தனர்.

புதுக்கோட்டையில் தொடரும் போராட்டம்: பொன்னமராவதி உட்பட 49 கிராமங்களுக்கு 144 தடை

இந்நிலையில், அமைதிக்கு மேலும் பங்கம் வந்துவிடாமல் இருப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் போராட்டம் நடைபெற்ற பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடவும், பொன்னமராவதி உள்ளிட்ட 49 கிராமங்களுக்கு 144 தடை அமல்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories