தமிழ்நாடு

இந்த 12 ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

பூத் ஸ்லிப் இருந்தாலும் இந்த 12 ஆவணங்களில் ஒரு ஆவணத்தை வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டும்

ஏப்ரல் 18-ம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் 
ஏப்ரல் 18-ம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாளை ( ஏப்ரல் 18-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பூத் ஸ்லிப்போடு இந்த பன்னிரண்டு ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டும்.

வாக்களிக்கத் தேவையான 12 ஆவணங்கள்:

1. வாக்காளர் அடையாள அட்டை

2. பாஸ்போர்ட்

3. ஓட்டுநர் உரிமம்

4. மத்திய மாநில அரசு ஊழியர்களின் பணிக்கான அடையாள அட்டை

5. பான் கார்டு

6. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அடையாள அட்டை

7. புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலக பாஸ்புக்.

8. தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.

9. இந்திய அரசால் கொடுக்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை.

10. எம்.பி, எம்.எல்.ஏக்கள் அடையாள அட்டை

11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை

12. ஆதார் அட்டை

banner

Related Stories

Related Stories