விளையாட்டு

“RCB-யை IPL சாம்பியனாக்க வேண்டும் என்பதே எனது கனவு” - CSK குறித்து தினேஷ் கார்த்திக் பேசியது என்ன ?

பெங்களூரு அணியை சாம்பியனாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

“RCB-யை IPL சாம்பியனாக்க வேண்டும் என்பதே எனது கனவு” - CSK குறித்து தினேஷ் கார்த்திக் பேசியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கடைசியாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடினார். அதனைத் தொடர்ந்து சர்வதேச மற்றும் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் பயிற்சியாளராக அவர் ஆடிய பெங்களூரு அணி நியமித்தது.

“RCB-யை IPL சாம்பியனாக்க வேண்டும் என்பதே எனது கனவு” - CSK குறித்து தினேஷ் கார்த்திக் பேசியது என்ன ?

இந்த நிலையில் பெங்களூரு அணியை சாம்பியனாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “என் வாழ்க்கையில் ஐ.பி.எல் இல் பெங்களூரு அணிக்காக ஆடிய 3 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியானது. அதனை என்னால் மறக்கவே முடியாது. அந்த அணியின் ரசிகர்கள் தீவிரமானவர்கள்.

அந்த அணிக்காக அடுத்த ஆண்டு முதல் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூரு அணியை சாம்பியனாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதனை அடுத்த முறை நிறைவேற்ற முயற்ச்சி செய்வேன். சென்னை அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான். ஆனால், ஏலத்தின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். எனவே அதனை கடந்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories