விளையாட்டு

எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் போராடி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா: 1 CM வித்தியாசத்தில் பறிபோன தங்கம்!

வலதுகை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் அதனை தாண்டி நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றது தற்போது தெரியவந்துள்ளது.

எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் போராடி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா: 1 CM வித்தியாசத்தில் பறிபோன தங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர், உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் என அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான டைமன் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் போராடி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா: 1 CM வித்தியாசத்தில் பறிபோன தங்கம்!

நீரஜ் சோப்ரா 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்த நிலையில் அவரை விட 1 செ.மீ அதிக தூரம் ஈட்டி எறிந்த கிராணட் பீட்டர்ஸ் ஆண்டர்சன் தங்கம் வென்றார். இந்த நிலையில், வலதுகை விரலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் அதனை தாண்டி நீரஜ் சோப்ரா பதக்கம் வென்றது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “கடந்த திங்கட்கிழமை, பயிற்சி மேற்கொண்டபோது எனக்கு காயம் ஏற்பட்டு, எக்ஸ்ரேவில் எனது இடது கை விரல் முறிந்திருப்பது தெரிய வந்தது. இது எனக்கு வலி மிகுந்த சவாலாக இருந்தது. எனினும் இந்த தொடரில் விளையாடவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன்.

இந்த தொடரில் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனக்கு ஊக்கமளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டி என்பதால் மீண்டும் 2025ல் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories