விளையாட்டு

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த வங்கதேசம் : வலுவான நிலையில் இருந்து வீழ்ந்த பாகிஸ்தான் !

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த வங்கதேசம் : வலுவான நிலையில் இருந்து வீழ்ந்த பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்த வங்கதேச அணி 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. அதோடு ஒரே ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்திருந்தது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 448-6 என்ற நல்ல நிலையில் இருந்தது. இந்த வலுவான சூழலில் வங்கதேச அணியை எளிதாக எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் 500 ரன்களை கூட அடிக்காமல் டிக்ளேர் செய்தது. ஆனால் வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த வங்கதேசம் : வலுவான நிலையில் இருந்து வீழ்ந்த பாகிஸ்தான் !

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 30 ரன்கள் என்ற இலக்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வங்கதேச அணி சாதனை படைத்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் 274 ரன்கள் குவிக்க, 26-6 என்ற மோசமான நிலையில் இருந்து வங்கதேச அணி 262 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் வழக்கம்போல சொதப்பி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 185 ரன்கள் இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டிய வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

banner

Related Stories

Related Stories