தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது.
இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டியகொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியை நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில், இன்று இரண்டாம் நாளில் முக்கிய போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான கால அட்டவணை விவரம் :
.JK F-LGB 4 பந்தயத்தின் தகுதிச்சுற்று 1 - 11.45 முதல் 11.57 வரை (ஏழு நிமிடம்)
தகுதிச்சுற்று 2 - 11.55 - 12.02 (ஏழு நிமிடம்)
பிரதான ரேஸ் - மதியம் 1.20 (8 சுற்று)
2.இந்தியன் ரேஸிங் லீக்
தகுதிச்சுற்று 1(DriverB) - 12.15 முதல் 12.25 வரை (10 நிமிடம்)
தகுதிச்சுற்று 2(Driver A) - 2 மணி முதல் 2.10 வரை (10நிமிடம்)
பிரதான ரேஸ்
Driver A - 4.30 மணி முதல் 5 மணி வரை (25 நிமிடம் + 1 சுற்று)
Driver B - இரவு 9.45 முதல் 10.15 மணி வரை (25 நிமிடம் + 1 சுற்று)
3.பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்
தகுதிச்சுற்று 1- 12.35 முதல் 12.45 வரை (10 நிமிடம்
தகுதிச்சுற்று 2 - 12.50 மணி முதல் 1 மணி வரை (10நிமிடம்)
பிரதான ரேஸ் 1 - 3.30 முதல் 4 மணி வரை (25 நிமிடம் + ஒரு சுற்று)
ரேஸ் 2 - இரவு 8.45 முதல் 9.15 மணி வரை (25 நிமிடம் + 1 சுற்று)