ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அடுத்து பாரிஸில் பாரா ஒலிம்பிப் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடர் செப்.8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இருந்து உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், பவர் லிப்ட்டிங்கில் ஸ்தூரி ராஜாமணி ஆகிய 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மகளிர் 10 மீ ஏர் ரைஃபில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகர தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஒலிம்பிக் தொடரில் இதே பிரிவில் இவர் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மோனோ அகர்வால் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டு பதக்கங்களை வென்று பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் தன் கணக்கை இந்தியா தொடங்கியுள்ளது .