விளையாட்டு

“மஜா பண்றோம்”- தமிழில் பேசி அசத்திய பும்ரா... சென்னையில் மறக்கமுடியாத அனுபவத்தை பெற்ற இந்திய அணி நாயகன் !

“மஜா பண்றோம்”- தமிழில் பேசி அசத்திய பும்ரா... சென்னையில் மறக்கமுடியாத அனுபவத்தை பெற்ற இந்திய அணி நாயகன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.

“மஜா பண்றோம்”- தமிழில் பேசி அசத்திய பும்ரா... சென்னையில் மறக்கமுடியாத அனுபவத்தை பெற்ற இந்திய அணி நாயகன் !

ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையை வெல்ல பும்ரா முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவ்வாறு தனது தொடர் சாதனைகளின் காரணமாக இந்திய ரசிகர்கள் மனதில் விராட் கோலி, ரோஹித் சர்மாக்கு இணையான புகழ்பெற்ற வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.

அதனை வெளிக்காட்டும் விதமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி அமைந்துள்ளது. ன்னையில் நேற்று நடந்த சத்யபாமா ப‌ல்கலைக்கழக விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பும்ரா அழைக்கப்பட்டுள்ளார்.

அந்த விழாவில் மாணவர்கள் பும்ராவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவர்கள் மத்தியில் “மஜா பண்றோம்” எனத் தமிழிலும் பும்ரா பேச அதற்கு மாணவர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர். பின்னர் இந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பும்ரா அதில், “மாணவர்கள் கூட்டத்தின் ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே மறக்க முடியாததாக அமைந்தது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories