விளையாட்டு

நிறைவடைந்தது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் : முதலிடத்தை பிடித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த இடம் ?

இரண்டரை வாரங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த ஒலிம்பிக் தொடரின் விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளது.

நிறைவடைந்தது ஒலிம்பிக்  விளையாட்டு போட்டிகள் : முதலிடத்தை பிடித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த இடம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொண்டனர். அதே போல இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த ஒலிம்பிக் தொடரின் விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளது. இதில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 புத்தகங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நிறைவடைந்தது ஒலிம்பிக்  விளையாட்டு போட்டிகள் : முதலிடத்தை பிடித்த அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த இடம் ?

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை ஜப்பானும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தை ஆஸ்திரேலியா , பிரான்ஸ் அணிகளும் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன், கொரியா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய அணிகளும் பிடித்துள்ளது.

இந்த தொடரில் 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இந்தியா 71-வது இடத்தையே பிடித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை ஒலிம்பிக் நிறைவு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories