விளையாட்டு

T20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமனம் : கம்பீர் வருகையால் ஹர்திக் பாண்டியாவுக்கு நேர்ந்த சோகம் !

இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

T20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமனம் : கம்பீர் வருகையால் ஹர்திக் பாண்டியாவுக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்படவுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இருதரப்புத் தொடருக்காக இலங்கை செல்லும் நிலையில், பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் அணியில் புதிய அத்தியாயத்தை இந்திய அணி மேற்கொள்கிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் அணியை வழிநடத்திய நிலையில், தற்போது அவருக்கு முழு நேர கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

T20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமனம் : கம்பீர் வருகையால் ஹர்திக் பாண்டியாவுக்கு நேர்ந்த சோகம் !

அதே போல டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா வெறும் வீரராக மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே நேரம் ஒருநாள் தொடருக்கான அணியை ரோஹித் சர்மா தலைமை தங்கவுள்ள நிலையில், துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் கே.எல் ராகுல் , ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி20 அணி விவரம் : சூர்யகுமார் யாதவ் (சி), ஹப்மேன் கில் (விசி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

ஒருநாள் அணி விவரம் : ரோஹித் ஷர்மா (சி), ஹப்மேன் கில் (விசி), விராட் கோலி, கேஎல் ராகுல் (டபிள்யூ கே), ரிஷப் பந்த் (டபிள்யூ கே), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

banner

Related Stories

Related Stories