விளையாட்டு

EURO 2024 : மாயாஜாலம் செய்த 16 வயது சிறுவன்... பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் !

EURO 2024 : மாயாஜாலம் செய்த 16 வயது சிறுவன்... பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.

இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதியதால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

EURO 2024 : மாயாஜாலம் செய்த 16 வயது சிறுவன்... பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் !

எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் கோலை பிரான்ஸ் அணி அடித்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவாணி தனது அணிக்காக முதல் கோலை அடித்து ஆட்டத்தின் முன்னிலை பெற்று கொடுத்தார்.

ஆனால் இதற்காக பதிலடியை ஸ்பெயின் அணியின் 16 வயதேயான இளம்வீரர் லமின் யமால் கொடுக்க மைதானமே அதிர்ந்தது. பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே இருந்து லமின் யமால் அடித்த கோல் தொடரின் சிறந்த கோல்களில் ஒன்றாக பதிவானது. அதோடு சர்வதேச தொடர்களில் சிறிய வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் யமால்க்கு கிடைத்துள்ளது.

EURO 2024 : மாயாஜாலம் செய்த 16 வயது சிறுவன்... பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் !

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஓல்மா தனது அணிக்காக மற்றொரு கோலை அடிக்க 1-0 என்ற நிலையில் இருந்து 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி இந்த போட்டியில் முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்க பிரான்ஸ் வீரர்கள் கடுமையாக முயன்றும் அதற்கு இறுதிவரை பலம் கிடைக்காமல் சென்றது.

இதனால் 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி யூரோ கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை சந்திக்கவுள்ளது.

banner

Related Stories

Related Stories