இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த 2022-ம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.பின்னர் தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரில் பெங்களூரு அணியில் இருந்து வெளியேறியது.அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மைதானத்தை வலம்வந்து ரசிகர்களின் பிரியாவிடையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், சர்வதேச மற்றும் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்ற திணேஷ் கார்த்திக்கை பேட்டிங் பயிற்சியாளராக அவர் ஆடிய பெங்களூரு அணி நியமித்துள்ளது. அது குறித்து அந்த அணி வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "எங்கள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திகை மீண்டும் அணிக்கு அழைக்கிறோம். ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருப்பார். கிரிக்கெட்டில் இருந்து இவரை பிரிக்கலாம். ஆனால், இவரிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது. அவர் எங்கள் அணியின் 12 வது படை வீரராக இருப்பார்" என கூறியுள்ளது.