கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.
மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் இறுதி லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா, ரோமானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, துருக்கி, ஜெர்மனி, டென்மார்க், ஜார்ஜியா , பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல் , ஸ்லோவேனியா, போர்த்துக்கல் ஆகிய அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 18 சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி ஸ்விட்சர்லாந்து அணியை சந்தித்தது. இதில் ஸ்விட்சர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு சூப்பர் 18 சுற்றில் இங்கிலாந்து அணி ஸ்லோவாக்கியா அணியை எதிர்கொண்டது.
இதில் ஸ்லோவாக்கியா அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், இங்கிலாந்து அணி பதில் கோல் அடித்து 1-1 என ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில் கோல் அடித்த இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஸ்லோவாக்கியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு சூப்பர் 18 சுற்றில் ஸ்பெயின் அணி 4-1 என்ற கணக்கில் ஜார்ஜியா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதே போல போட்டியை நடத்தும் அணியான ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.