விளையாட்டு

வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்... முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் : வெளியேறிய ஆஸ்திரேலியா !

வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்... முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் :  வெளியேறிய ஆஸ்திரேலியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள், நியூஸிலாந்து போன்ற வலிமையான அணிகள் இருந்த பிரிவில் ஆப்கானித்தான்அணி இடம்பெற்றிருந்தது.

எனினும் வலிமையான நியூஸிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானித்தான்அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றிபெற்று அபார சாதனை படைத்தது. இதனால் அடுத்து வரும் வங்கதேச அணியை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறமுடியும் என்ற நிலை ஆப்கானிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது.

வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்... முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் :  வெளியேறிய ஆஸ்திரேலியா !

இந்த சூழலில் இன்று ஆப்கானிஸ்தான் அணி இன்று வங்கதேசத்தை சந்தித்தது. பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடிய நிலையில், நடுவரிசை வீரர்கள் அதிரடியாக ஆடாததால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் ஆடிய வங்கதேச அணியில் துவக்க வீரர் லிட்டன் தாஸ் மட்டும் 50 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடினார். ஆனால் பிற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. ஆனால் அதை கூட எட்ட முடியாமல் வங்கதேச அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியையும், ஆப்கானிஸ்தான் அணி தென்னாபிரிக்க அணியையும் சந்திக்கவுள்ளது .

banner

Related Stories

Related Stories