விளையாட்டு

மேட்ச் பிக்ஸிங் செய்தாரா பாபர் அசாம் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளக்கம் என்ன ?

மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாமுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேட்ச் பிக்ஸிங் செய்தாரா பாபர் அசாம் ?  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளக்கம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்கா அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெறும் நிலையில் இருந்தது இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து தனது அடுத்த லீக் போட்டிகளில் அயர்லாந்து, கனடா அணிகளை வென்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது. அதன் பின்னர் பாகிஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முக்கிய போட்டிகளில் தோல்வியடைய வேண்டி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறியிருந்தார்.

மேட்ச் பிக்ஸிங் செய்தாரா பாபர் அசாம் ?  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளக்கம் என்ன ?

அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாபர் அசாமுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அணியின் வெற்றி, தோல்வி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மேட்ச் பிக்ஸிங் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்கள் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஆதாரங்களை அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் நாங்கள் அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்"என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories