விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா : சூப்பர் ஓவரில் ஜாம்பவானுக்கு அதிர்ச்சி அளித்த கத்துகுட்டி அணி !

பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா : சூப்பர் ஓவரில் ஜாம்பவானுக்கு அதிர்ச்சி அளித்த கத்துகுட்டி அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

20 அணிகள் கலந்துகொள்ளும் லகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் போட்டியை நடத்தும் அமெரிக்கா பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பவர் பிளே ஓவர்களுக்குள் பாகிஸ்தான அணி 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் பாபர் அசாம் - சதாப் கான் இணை சிறப்பாக ஆடி அணியை மீட்டனர்.

பாபர் அசாம் 44 ரன்களும், சதாப் கான் 40 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே குவித்தது. அமெரிக்கா தரப்பில் சவுரப் நட்ராவல்கர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா : சூப்பர் ஓவரில் ஜாம்பவானுக்கு அதிர்ச்சி அளித்த கத்துகுட்டி அணி !

பின்னர் ஆடிய அமெரிக்க அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆடியது. இறுதி கட்டத்தில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 14 ரன் கள் குவித்து ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு அமெரிக்க அணி கொண்டுசென்றது.

அதில்,முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் இந்த அதிர்ச்சி தோல்வி உலகக்கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories