தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.
பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு நடை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம்மாறுக்கப்பட்டதை குறிப்பிட்டு பலரும் தேர்வுக்குழுவை விமர்சித்து வந்தனர். மேலும் முன்னாள் வீரர்களும் பலரும் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நடராஜன்இந்திய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ன் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “நடராஜன் அணியின் முகமுக்கிய வீரர். அவரின் பலம் என்னவென்றால் அது யார்க்கர்தான். அவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் வீரரை கூட கட்டுப்படுத்தக்கூடியவர். இதனாலேயே அவர் அணியின் பெரிய சொத்தாக இருக்கிறார்.
அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதுமாக இந்த பார்மை தக்க வைத்துக் கொண்டால் அவர் இந்திய அணிக்கு செல்வதற்கான தூரம் அவருக்கு அதிகம் கிடையாது. சீக்கிரத்தில் இந்திய அணியில் அவர் இருப்பார். அதற்கு அவர் தகுதியான வீரர்" என்று கூறியுள்ளார்.