விளையாட்டு

"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?

ரிங்கு சிங்கை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமான முடிவு என தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் கூறியுள்ளார்.

"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?

இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இதனால் அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , ரிங்கு சிங்கை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமான முடிவு என தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் கூறியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு குறித்து பேசிய அவரிடம் ரிங்கு சிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " அவரை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு. ரிங்கு சிங் எதையும் தவறாக செய்யவில்லை. அணியில் இடத்தை தவற விட்டது அவருடைய தவறில்லை.

அணியில் பேட்டிங் செய்ய 2 சிறப்பான விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். எனவே மற்றொரு பவுலர் இருப்பது உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனால்தான் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. இப்போதும் ரிங்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளார். அந்தளவுக்கு நெருக்கமாக உள்ள அவருக்கு இது கொஞ்சம் கடினமாகும். இருப்பினும் நாளின் இறுதியில் உங்களால் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories