சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகள் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அமைக்கப்படுகிறது. மைதானங்கள் கூட அதிக ரன்கள் குவிக்கும் வகையில் தட்டையாக உருவாக்கப்படுகிறது என தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது. அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக 272 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில், பேட்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படும் ஆடுகளங்களால் பந்துவீச்சாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் தீபக் சகர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மிகவும் தட்டையாக இருக்கிறது. பெரும்பாலான மைதானங்களை இப்படியே இருக்கிறது. நான்
முழுக்க பேட்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படும் ஆடுகளங்களை கைவிடும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.விசாகப்பட்டினம் ஆடுகள தயாரிப்பாளரிடம் 300 ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டதற்கு அவர், 277 ரன்கள் அடித்ததை நான் முறியடிக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார். இதுபோன்ற மனநிலைகள் மாறவேண்டும்.
ஆடுகளம் இருதரப்புக்கும் சம அளவில் ஒத்துழைக்க வேண்டும். முன்பு மிகவும் தட்டையான ஆடுகளங்களாக இருக்காது. பந்து வீச்சாளர்களுக்கு உதவியாகவும் மைதானம் இருக்கும். இப்பொழுது இரண்டு பவுன்சர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதனை மிடில் ஓவர் மற்றும் கடைசிக்கட்ட ஓவர்களில் பயன்படுத்துவது சரியாக இருக்கும்"என்று கூறியுள்ளார்.