இந்தியா

ராஜஸ்தான்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி- பெயர் கெட்டுவிடும் என பள்ளியில் சேர்க்க மறுத்த நிர்வாகம்

ராஜஸ்தான்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி- பெயர் கெட்டுவிடும் என பள்ளியில் சேர்க்க மறுத்த நிர்வாகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது,. இந்த பள்ளியில் சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு கடந்த ஆண்டு பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது ஒரு கொடூரம் நடந்துள்ளது.

பள்ளி சென்றுகொண்டிருந்த சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை தூக்கிச்சென்ற அந்த கும்பல் அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலிஸார் குற்றவாளிகளை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜஸ்தான்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி- பெயர் கெட்டுவிடும் என பள்ளியில் சேர்க்க மறுத்த நிர்வாகம்

பின்னர் உடல்நலம் தேறியதும் சிறுமி மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியவரை பள்ளியில் சேர்ந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று கூறி சிறுமியை பள்ளியில் சேர்க்க நிர்வாகம் மறுத்து தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்களின் உதவியால் பள்ளியின் செயல் குறித்து நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories