விளையாட்டு

கடந்த ஒன்றரை வருடங்கள், நான் நினைத்தது ஒன்றுதான்- விபத்திலிருந்து மீண்டது குறித்து ரிஷப் பண்ட் உருக்கம் !

நான் மீண்டும் மைதானத்திற்கு வர வேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு இருந்தது என்று தனது நிலை குறித்து ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்கள், நான் நினைத்தது ஒன்றுதான்- விபத்திலிருந்து மீண்டது குறித்து ரிஷப் பண்ட் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.

அதன் பின்னர் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்றார். தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரிஷப் பண்ட் மீண்டும் உடல்தகுதி பெறுவார் என்று கூறப்பட்டது. வரும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என அவர் இடம்பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறினார்.

கடந்த ஒன்றரை வருடங்கள், நான் நினைத்தது ஒன்றுதான்- விபத்திலிருந்து மீண்டது குறித்து ரிஷப் பண்ட் உருக்கம் !

பின்னர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி வருகிறார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி தனது உடல்தகுதியை நிரூபித்தார்.

இந்த நிலையில், நான் மீண்டும் மைதானத்திற்கு வர வேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு இருந்தது என்று தனது நிலை குறித்து ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "கடந்த ஒன்றரை வருடங்கள் என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிய நாள்களாக இருந்தது. என்ன நடந்தாலும், நான் மீண்டும் மைதானத்திற்கு வர வேண்டும் என்ற வைராக்கியம் அப்போது எனக்கு இருந்தது.

வேறு எதைப் பற்றியும் நான் சிந்திக்காமல் ஒரு கிரிக்கெட் வீரராக 100 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.கடந்த ஒன்றரை வருடங்கள் விளையாடாமல் இருந்ததால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வது என முடிவு செய்தேன். என்னால் போட்டியை மாற்ற முடியும் என்றும் நம்பினேன். கிரிக்கெட் வீரராக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories