நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை அணிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வேண்டு கொடுத்தார். இதன் காரணமாக அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான் தோனியின் இடத்தில சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், ருதுராஜ் இயற்கையாகவே அமைதியான பாவம் கொண்ட எதற்கும் பதட்டப்படாத நபர் என்று சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசியுள்ள அவர், "ருதுராஜ் மிகவும் அமைதியான நபர் என்று நான் நினைக்கிறேன். அவர் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அவர் இங்கு வந்தது முதல் எங்களிடம் நிறைய கேள்விகள் கேட்டு முக்கியமான விஷயங்கள் பற்றி தொடர்ந்து உரையாடுவார். அந்த வகையில் கிரிக்கெட்டில் அவர் மாணவராக இருக்கிறார்.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்டேட்டர்ஜி குறித்த புரிதல் மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் ஸ்டேட்டர்ஜி எதற்காக உருவாக்கப்பட்டது? ஏன் அதைப் பயன்படுத்துகிறார்கள்? என்று புரிந்து கொள்வது அவசியம். அதனை ருதுராஜ் புரிந்துகொண்டுள்ளார். ருதுராஜ் இயற்கையாகவே அமைதியான பாவம் கொண்ட எதற்கும் பதட்டப்படாத நபர். இந்த கண்ணோட்டத்தில் இருந்து அவர் சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அவரைச் சுற்றி அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். இதனால் அவருக்கு கேப்டன் பொறுப்பு இயல்பாக நல்லபடியாக அமையும்"என்று கூறியுள்ளார்.