விளையாட்டு

13 ஆண்டாக துரத்தும் சோகம் : வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி !

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13 ஆண்டாக துரத்தும் சோகம் : வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்ற குஜராத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாஹா 19 ரன்னுக்கும், கில் 31 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். எனினும் சிறப்பாக ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் குவித்தார்.

இறுதிக்கட்டத்தில் ராகுல் திவாதியா 15 பந்துகளுக்கு 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெடுகளை வீழ்த்தினார்.

13 ஆண்டாக துரத்தும் சோகம் : வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி !

பின்னர் ஆடிய மும்பை அணியில் துவக்க வீரர் இஷான் கிஷன் ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும் தென்னாபிரிக்க வீரர் டெவால்ட் ப்ரிவிஸ் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தனர். இதனால் மும்பை அணி வெற்றபெறும் என எதிர்பாக்கப்பட்டது.

ஆனால், இறுதியில் குஜராத் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட இறுதிக்கட்டத்தில் மும்பை வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். இறுதியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி கடந்த 11 ஆண்டுகளாக தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தோல்வியடையும் வரலாறு தொடர்ந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories