விளையாட்டு

சர்ஃப்ராஸ் கான் இதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார், அதனால்தான் அவரை நீக்கினோம் - கங்குலி கூறியது என்ன ?

சர்ஃபராஸ் கான் டி20 போட்டிகளுக்கு ஏற்றவர் அல்ல என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

சர்ஃப்ராஸ் கான் இதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார், அதனால்தான் அவரை நீக்கினோம் - கங்குலி கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83.

ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்தார்.

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அறிமுக போட்டியிலேயே 48 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். எனினும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சோபிக்க தவறினார்.

சர்ஃப்ராஸ் கான் இதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார், அதனால்தான் அவரை நீக்கினோம் - கங்குலி கூறியது என்ன ?
PUNIT PARANJPE

அவரின் ஆட்டத்தை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வரும் நிலையில், சர்ஃபராஸ் கான் டி20 போட்டிகளுக்கு ஏற்றவர் அல்ல என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்குலியிடம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏன் சர்ஃபராஸ் கானை தக்கவைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " சர்ஃபராஸ் கான் முற்றிலும் ஐந்து நாள் ஆட்டக்காரர் என்று நான் நினைக்கிறேன். அவரது ஆட்டம் அதற்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ஆனால் டி20 என்பது ஒரு வித்தியாசமான வடிவம். அதற்கு அவர் ஏற்றவர் அல்ல என்று நான் நினைக்கிறன். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஏராளமான ரன்கள் அடித்துள்ளார்.

ரஞ்சி கோப்பையிலும், முதல் தர கிரிக்கெட்டிலும் அவர் அடித்த ரன்களின் அளவு அபாரமானது. எல்லோரும் சொல்வது போல், நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்தால், அது எப்போதும் வீண் போகாது. அதுதான் சர்ஃபராஸ் கானுக்கும் நடந்தது. அவர் பெரிய வீரராக வர வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories