இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்கு பிறகு முன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.
இந்த போட்டியின் இரண்டாவது சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜெய்ஸ்வால் குறித்து பேசிய இங்கிலாந்து வீரரின் கருத்துக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கண்டனம்தெரிவித்துள்ளார் .
ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் "தங்களிடம் விளையாடும் எதிரணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு தாங்கள்தான் காரணம்.அதற்கான கிரெடிட் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் " என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், " ஆண்டர்சன் தங்கள் அணி 600 ரன்கள் இலக்கையும் துரத்தும் என்கிறார். ஆனால் அவர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை கூட துரத்தவில்லை. மூன்றாவது போட்டியில் 122 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், ஜெயஸ்வாலின் ஆட்டத்துக்கான பெருமை தங்களுக்கே சேர வேண்டும் என்று பென் டக்கேட் கூறுகிறார். ஏன் இதுவரை யாருமே அதிரடியாக விளையாடியது இல்லையா? இதுவரை யாருமே அட்டாக்கிங் பேட்டிங் செய்தது கிடையாதா?" என்று கூறியுள்ளார்.