விளையாட்டு

INDvsENG : கபில்தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின் - இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் காட்டிய இங்கிலாந்து !

INDvsENG : கபில்தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின் -  இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் காட்டிய இங்கிலாந்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.,

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இங்கிலாந்து அணியை விட 190 ரன்களை முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய ஆடுகளத்தில் தன்மையை புரிந்துகொண்டு சிறப்பாக ஆடியது. இன்று மூன்றாம் நாள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது.

INDvsENG : கபில்தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின் -  இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் காட்டிய இங்கிலாந்து !

அபாரமாக ஆடிய இங்கிலாந்து வீரர் ஓலி போப் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் கபில் தேவ்வின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

கபில் தேவ் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முடாஸர் நசரை 12 முறை வீழ்த்தியுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸை அஸ்வின் 12 முறை வீழ்த்தியுள்ளார். இருவரும் 25 இன்னிங்ஸ்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories