ஹரியானவை சேர்ந்தவர் மிருனாங்க் சிங். இவர் ஹரியானா மாநில அணிக்காக 19 வயதுக்கு உற்ப்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று தன்னை ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர் என்று சொல்லி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான தாஜ் பேலஸில் தங்கியுள்ளார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்தவர் பின்னர் ஹோட்டலை காலி செய்துள்ளார்.
அப்போது தங்கிய கட்டணமாக ரூ.5.53 லட்சம் கொடுக்கவேண்டியிருந்தது. அப்போது பணத்தை தனது ஸ்பான்சர் செலுத்துவார் என்று கூறி, ரூ.2 லட்சம் ஆன்லைனில் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், அப்படி எந்த பணமும் செலுத்தப்படாத நிலையில், ஹோட்டல் நிர்வாகம் அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அது விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, டெல்லி விமான நிலையத்தில் விமானம் மூலம் ஹாங்காங் செல்ல மிருனாங்க் முயற்சி மேற்கொண்டபோது, அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். அங்கும் தனது தந்தை உயர் அதிகாரி எனக் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். எனினும் அவரை விமான நிலைய அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு நட்சத்திர ஹோட்டலில் இவ்வாறு ஏமாற்றியதாகவும், மேலும், இளம்பெண்கள், பார்கள் போன்றவர்களிடம் அவர் ஏமாற்றியதும் தெரியவந்தது. உச்சகட்டமாக இந்திய வீரர் ரிஷப் பண்ட்டிடமும் ரூ.1.63 கோடியை மோசடி செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை போலிஸார் கைது செய்தனர்.