விளையாட்டு

அபாயகரமாக திகழ்ந்த மைதானம்.. 6.5 ஓவர்களில் முடித்துக்கொள்ளப்பட்ட ஆட்டம்- முக்கிய போட்டியில் நடந்தது என்ன?

பிக் பாஷ் போட்டி ஒன்றில் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அபாயகரமாக திகழ்ந்த மைதானம்.. 6.5 ஓவர்களில் முடித்துக்கொள்ளப்பட்ட ஆட்டம்- முக்கிய போட்டியில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் பணியில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டு அங்கு அது வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த சூழலை 2023-2024ஆம் ஆண்டுக்கான பிக்பாஷ் லீக் டி20 தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று மெல்போர்ன் ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், முதல் ஓவரில் இருந்தே பந்துகள் சீரற்ற வேகத்தில் பௌன்ஸ் ஆகியது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறிணர். தொடக்க வீரர் ஸ்டீபன் எஸ்கினாசி இரண்டாவது பந்திலேயே ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரரான கூப்பர் கன்னோலியும் 6 ரன்னில் வெளியேறினார். இந்த மைதானத்தில் நல்ல லெந்தில் வீசப்பட்ட பந்து கூட பேட்ஸ்மேன் தலைக்கு நேராக சீறியது. சில பந்துகள் விக்கெட் கீப்பரையும் தாண்டி பௌன்ஸ் ஆகின.

இதன் காரணமாக 6.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் மைதானத்திலே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பல்வேறு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் இந்த மைதானத்தின் தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories