விளையாட்டு

ஹர்திக்கால் அதிருப்தி : மும்பை அணியை பின்தொடருவதை நிறுத்திய பும்ரா.. வேறு அணிக்கு செல்ல திட்டம் ?

மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடருவதை ஜஸ்பிரிட் பும்ரா நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக்கால் அதிருப்தி : மும்பை அணியை பின்தொடருவதை நிறுத்திய பும்ரா.. வேறு அணிக்கு செல்ல திட்டம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது. இதனிடையே தற்போது அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அணிகள் தக்கவைத்த, விடுவித்த, பரிமாற்றம் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஹர்திக்கால் அதிருப்தி : மும்பை அணியை பின்தொடருவதை நிறுத்திய பும்ரா.. வேறு அணிக்கு செல்ல திட்டம் ?

இதில், மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 36 வயதாவதால், அந்த அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடருவதை ஜஸ்பிரிட் பும்ரா நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் இல்லாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என அவர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று வெளியான தகவலால் பும்ரா அதிருப்தியில் இவ்வாறு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்வரை வீரர்களை அணி நிர்வாகம் பரிமாறிக்கொள்ளலாம் என்று விதி இருப்பதால் பும்ரா வேறு அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தகையை செய்திகள் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

banner

Related Stories

Related Stories