விளையாட்டு

உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு : கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் அசாம் முடிவு ?

கேப்டன் பதவியை விட்டு விலக பாபர் அசாம் முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு : கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் அசாம் முடிவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.

அதன் பின்னர் தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 277 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது, இலக்கை 2.3 ஓவர்களில் எட்டினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தப் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பையில் மோசமான செயல்பாடு : கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் அசாம் முடிவு ?

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை. இதன் காரணமாக கேப்டன் பதவியை விட்டு விலக பாபர் அசாம் முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் பாகிஸ்தான் வாரியம் சார்பில், பாபர் அசாமை தொடர்ந்து கேப்டன் பதவியில் தொடர கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories