விளையாட்டு

வரலாற்றில் யாரும் நெருங்க முடியாத சாதனை : கால்பந்தின் உயரிய விருதை 8-வது முறையாக வென்ற மெஸ்ஸி !

கால்பந்தில் உயரிய விருதாக கருதப்படும் 'பாலன் டி ஓர்' விருதை 8-வது முறையாக வென்று மெஸ்ஸி அசத்தியுள்ளார்.

வரலாற்றில் யாரும் நெருங்க முடியாத சாதனை : கால்பந்தின் உயரிய விருதை 8-வது முறையாக வென்ற மெஸ்ஸி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் தனது முதல் உலகக்கோப்பையை வென்று மெஸ்ஸி அசத்தினார்.

உலகசாம்பியனான மெஸ்ஸி, பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அழைக்கப்படும் PSG கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். அவரின் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடைந்த நிலையில், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்தார்.

அணியில் இணைந்ததோடு அந்த அணிக்காக முதல் கோப்பையையும் வென்றுகொடுத்து மெஸ்ஸி அசத்தினார். அதோடு இந்த ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதுக்கும் அவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த விருதை மெஸ்ஸி ஏற்கனவே 7 முறை வென்றநிலையில், 8-வது முறையாக வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

வரலாற்றில் யாரும் நெருங்க முடியாத சாதனை : கால்பந்தின் உயரிய விருதை 8-வது முறையாக வென்ற மெஸ்ஸி !

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், விருதுப் பட்டியலில் 30 பேர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இந்த பட்டியலில் முதல் முறையாக ரொனால்டோவில் பெயர் இடம்பெறாத நிலை ஏற்பட்டது.

இந்த விருதை வெல்ல நார்வே வீரரும், மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடும் எர்லிங் ஹாலண்ட் என்பவருக்கும் மெஸ்ஸிக்கும் போட்டி நிலவியது. இறுதியில் அதிக வாக்குகள் பெற்று கால்பந்தில் உயரிய விருதாக கருதப்படும் 'பாலன் டி ஓர்' விருதை 8-வது முறையாக வென்று மெஸ்ஸி அசத்தியுள்ளார். 5 'பாலன் டி ஓர்' விருதுகளோடு இந்த பட்டியலில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் யாரும் நெருங்க முடியாத சாதனை : கால்பந்தின் உயரிய விருதை 8-வது முறையாக வென்ற மெஸ்ஸி !

எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக சாம்பியன்ஸ் லீக், பிரீமியர் லீக், FA கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். அதே போல பிரீமியர் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர், பிரீமியர் லீக் தொடர் நாயகன், UEFA சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

அதே நேரம் மெஸ்ஸி, உலகக்கோப்பை, லீக் 1 கோப்பை, லீக் 1 நாக் அவுட் கோப்பை ஆகியவற்றை வென்றதோடு, லீக் 1 தொடரில் அதிக அசிஸ்ட் செய்த வீரர், உலகக்கோப்பை தங்கக்கால்பந்து, உலகக்கோப்பை தொடர் நாயகன், உலகக்கோப்பையில் அதிக அசிஸ்ட் செய்த வீரர், FIFA சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன் காரணமாக மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories