விளையாட்டு

"உனக்கு ஃபிட்னஸ் ஏதும் பிரச்னையா,பும்ராவை பார்த்து கற்றுகொள்"- பாக். வீரரை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பும்ராவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கூறியுள்ளார்.

"உனக்கு ஃபிட்னஸ் ஏதும் பிரச்னையா,பும்ராவை பார்த்து கற்றுகொள்"- பாக். வீரரை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 7 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகவும் திகழ்கிறார்.

"உனக்கு ஃபிட்னஸ் ஏதும் பிரச்னையா,பும்ராவை பார்த்து கற்றுகொள்"- பாக். வீரரை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!

இந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பும்ராவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ஷாகின் அப்ரிடி ஃபிட்னஸில் ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவரின் பந்துவீச்சில் ஒழுக்கம் மிஸ் ஆகிறது. விக்கெட்டுக்காக அதிகமாக முயற்சித்து ரன்களை விட்டுக்கொடுக்கிறார். ஒவ்வொரு முறையும் யார்க்கரை மட்டுமே வீச முயற்சிப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இந்திய அணியின் பும்ரா ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு முயற்சிக்காமல், பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறார். சரியாக ஆஃப் ஸ்டம்புக்கு மேல் தனது லைனை தொடர்ந்து வைத்து நெருக்கடி கொடுக்கிறார். அதனால்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி அழுத்தம் கொடுத்ததோடு, விக்கெட்டுகளையும் சாய்த்தார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories