விளையாட்டு

இது ICC உலகக்கோப்பையா ? BCCI உலகக்கோப்பையை ? -விமர்சனங்களுக்கு ஐசிசி-யின் பதில் என்ன ?

தொடரின் முடிவில் இது சிறப்பானதொரு உலகக் கோப்பை தொடராக இருக்கும் என நம்புகிறேன் என ஐசிசி தலைவர் கூறியுள்ளார்.

இது ICC உலகக்கோப்பையா ? BCCI உலகக்கோப்பையை ? -விமர்சனங்களுக்கு ஐசிசி-யின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. வழக்கமாக மார்ச்சில் இருந்து மே வரையான காலகட்டத்தில்தான் உலகக்கோப்பை நடைபெறும். ஆனால், ஐபிஎல் காரணமாக பிசிசிஐ மழை காலமான அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பையை நடத்தியது.

அதேபோல உலகக்கோப்பையில் தொடக்க போட்டிக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்த நாளில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி எந்தவித தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறாமல் மிகவும் எளிமையான நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் இன்று மைதானம் வெறிச்சோடு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் மோதிய போட்டிகளை காண பல்வேறு நட்சத்திர நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளதும், அந்த நாளில் இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Greg Barclay
Greg Barclay

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய விசா வழங்காதது, அஹமதாபாத் மைதானத்தில் எழுப்பப்பட்ட மதரீதியிலான கோசம். அதை உற்சாகப்படுத்தி மத ரீதியிலான பாடலை ஒலிக்கவிட்ட நீர்வாகம் என ஒரு சார்பு தொடராகவே இது நடந்து வருகிறது.

பொதுவாக ஐசிசி நடத்தும் தொடர்களில் அனைத்து அணிகளுக்கு சம அங்கீகாரம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது இந்திய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும், இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தனி முக்கியத்துவத்தை பிசிசிஐ வழங்குவது, அதற்கு ஐசிசி மெளனமாக சம்மதம் கொடுப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஐசிசி தொடருக்கு எப்போதும் வெவ்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழும். அதை கவனத்துடன் கையாள்வோம். இந்த தொடர் தற்போது தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது. அதனால் இது எப்படி செல்கிறது என்பதை பார்ப்போம். அதனடிப்படையில் என்ன மாற்றம் செய்யலாம், எதனை சிறப்பாக செய்யலாம், உலகக் கோப்பை தொடர் சார்ந்த மேம்பாடு போன்றவற்றை மதிப்பாய்வு செய்வோம். அதே நேரத்தில் தொடரின் முடிவில் இது சிறப்பானதொரு உலகக் கோப்பை தொடராக இருக்கும் என நம்புகிறேன்"எம்ரி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories