விளையாட்டு

நாலாபுறமும் பறந்த பந்து : கடுப்பில் இருந்த சாம் கரன்.. நடுவில் சிக்கிய கேமரா மேனுக்கு நடந்த சோகம் !

மைதானத்தில் கேமரா மேனிடம் கடுமையாக நடந்துகொண்ட சாம் கரனின் செயல் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாலாபுறமும் பறந்த பந்து : கடுப்பில் இருந்த சாம் கரன்.. நடுவில் சிக்கிய கேமரா மேனுக்கு நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் ஹாரி புரூக் மட்டுமே ஆறுதல் அளித்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் முடிவில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியின்போது முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர் குர்பாஸ் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அதிலும் தனது முதல் ஸ்பெல்லை வீசிய சாம் கரனின் 4 ஓவர்களில் 46 ரன்களை ஆப்கான் தொடக்க வீரர்கள் விளாசினார்.

இதன் காரணமாக கடும் வெறுப்பில் இருந்த சாம் கரன் பவுண்டரி லைனுக்கு அருகில் ஃபீல்டிங் செய்துகொண்டிருத்தபோது அவரை கேமராமேன் ஒருவர் நெருக்கமாக படமெடுத்து கொண்டிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சாம் கரன் கோவமடைந்து கேமராமேனை தள்ளிவிட்டார்.இதுவும் கேமராவில் பதிவாகின நிலையில், அது குறித்த காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் சாம் கரனை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories