விளையாட்டு

"அரையிறுதிக்கு இந்தியா முன்னேறும், ஆனால், கோப்பை வெல்லும் அணி இதுதான்" - ஸ்டூவர்ட் பிராட் கணிப்பு !

இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் இந்த உலகக்கோப்பையை இந்திய அணியின் தொடராகவே பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

"அரையிறுதிக்கு இந்தியா முன்னேறும், ஆனால், கோப்பை வெல்லும் அணி இதுதான்" - ஸ்டூவர்ட் பிராட் கணிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பை குறித்து கருத்து தெரிவிக்கும் பலர், இந்திய அணியே இந்த உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் இந்த உலகக்கோப்பையை இந்திய அணியின் தொடராகவே பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

"அரையிறுதிக்கு இந்தியா முன்னேறும், ஆனால், கோப்பை வெல்லும் அணி இதுதான்" - ஸ்டூவர்ட் பிராட் கணிப்பு !

இது குறித்துப் பேசியுள்ள அவர், "சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடர்களை கடந்த சில ஆண்டுகளில் அந்தந்த நாடுகளே வென்றுள்ளது. என்னை பொறுத்தவரை இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது

இந்த உலகக்கோப்பை இங்கிலாந்து அணி வென்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் தொடராக தான் பார்க்கிறேன்.இந்திய அணியை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் எல்லாம் இந்தியாவை வீழ்த்த முடியுமா என்பது மட்டுமே சந்தேகமே" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories