விளையாட்டு

உலகக்கோப்பை உணவு மெனுவில் இடம்பெறாத மாட்டுக்கறி.. BCCI-யின் அரசியலுக்கு இணங்கிய ICC.. முழு விவரம் என்ன ?

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டுக்கறி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை உணவு மெனுவில் இடம்பெறாத மாட்டுக்கறி.. BCCI-யின் அரசியலுக்கு இணங்கிய ICC.. முழு விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் ஆசிய கோப்பை தொடரில் வென்று இந்தியா இன்னும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது. இந்தத் தொடருக்காக அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்தியா வந்துள்ள நிலையில், அவர்களுக்கான உணவு மெனு தற்போது வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை உணவு மெனுவில் இடம்பெறாத மாட்டுக்கறி.. BCCI-யின் அரசியலுக்கு இணங்கிய ICC.. முழு விவரம் என்ன ?

ஆனால், அதில், மாட்டுக்கறி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய உணவாக மாட்டுக்கறி இருக்கும் நிலையில், அந்த உணவு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு அணிகளின் சார்பில் முணுமுணுப்புகள் எழுந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சர்ச்சை குறித்து இந்தியாவையும், ஐசிசி அமைப்பையும் விமர்சித்துள்ளன. பொதுவாக ஐசிசி தொடர்களில் மாட்டுக்கறி உணவு வகைகள் இடம்பெறும் நிலையில், பிசிசிஐ-யின் அழுத்தம் காரணமாகவே இந்தியாவில் நடக்கும் தொடரும் மாட்டுக்கறி இடம்பெறவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories