விளையாட்டு

வரலாற்றில் இடம்பிடித்த நீரஜ் சோப்ரா.. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தல் !

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் வீசி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்த நீரஜ் சோப்ரா.. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா கடனட்டை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர் என செல்லும் அனைத்து இடங்களிலும் தொடர் சாதனைப் படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

வரலாற்றில் இடம்பிடித்த நீரஜ் சோப்ரா.. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தல் !

தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற நீரஜ் சோப்ரா, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இறுதிச்சுற்றிலும் இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தனது வசப்படுத்தினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எரிந்து இரண்டாம் இடமும், செக் குடியரசைச் சேர்ந்த யாகூப் வட்லேய் 86.67 மீட்டர் தூரம் எறிந்த மூன்றாவது இடத்தையும் பிடித்தார். உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றதன் மூலம் அந்த தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories