விளையாட்டு

"உலகக்கோப்பையில் இந்திய அணியின் பலமே இந்த வீரர்தான்" -முன்னாள் வீரர் டாம் மூடி கூறிய வீரர் யார் ?

இந்திய அணியின் ஆட்டம் சில இடங்களில் எடுபடாததற்கு காரணம் அஸ்திவாரம் சரியான அமைக்கப்படாததே என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி கூறியுள்ளார்.

"உலகக்கோப்பையில் இந்திய அணியின் பலமே இந்த வீரர்தான்" -முன்னாள் வீரர் டாம் மூடி கூறிய வீரர் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஞ்சி தொடரில் பரோடா அணிக்காக ஆடிய ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியில் நீண்ட நாள் வேகப்பந்து வீச்சாளர் ஆல் ரவுண்டர் இல்லாத நிலையில், அந்த குறையை ஹர்திக் பாண்டியா நிறைவு செய்தார்.

இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா முதல் முறையிலேயே அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்தார். இதன் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா மாறியுள்ளார். இவர் அடுத்து வரவுள்ள ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் இவர் முக்கிய பங்காற்றுவார் எனவும் முன்னாள் வீரர்கள் பலர் கூறிவருகின்றனர்.

"உலகக்கோப்பையில் இந்திய அணியின் பலமே இந்த வீரர்தான்" -முன்னாள் வீரர் டாம் மூடி கூறிய வீரர் யார் ?

இந்த நிலையில், உலகக்கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக ஹர்திக் பாண்டியா திகழ்வார் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்திய அணி வலிமையாக இருக்கிறது. அந்த அணியில் தேவைக்கு ஏற்றது போல ஆடும் வீரர்களும் உள்ளனர். ஆனால், ஒரு சில இடங்களில் அது எடுபடாததற்கு காரணம் அஸ்திவாரம் சரியான அமைக்கப்படாததே.

இந்திய அணியில் தற்போது ஹர்திக் பாண்டியா தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருக்கிறார். அவருக்கான நேரம் வரும்போது சரியாக அதை தெரிந்து அவரை சீக்கிரம் களமிறக்கி, இன்னிங்ஸை மிக வேகமாக நகர்த்த அவர் முன்வரவேண்டும். அவர் திறந்த மனதுடன் ஆட்டத்தை அணுக வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்வார்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories