விளையாட்டு

"இந்த இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடையாது" - ரவி சாஸ்திரி கூறியது என்ன ?

ஒரு வீரர் விளையாடாமல் இருந்து காயத்தில் மீண்டு வந்து உடனே விளையாடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

"இந்த இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடையாது" -  ரவி சாஸ்திரி கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கே.எல்.ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர், பந்த் ஆகியோர் காயமடைந்த நிலையில், இந்திய நடுவரிசை பலவீனமாக திகழ்கிறது.

"இந்த இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடையாது" -  ரவி சாஸ்திரி கூறியது என்ன ?

இதில் கே.எல்.ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தற்போது காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களால் உலகக்கோப்பை தொடரில் திறம்பட செயல்படமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளார். இந்த நிலையில், ஒரு வீரர் விளையாடாமல் இருந்து காயத்தில் மீண்டு வந்து உடனே விளையாடுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "சில காலம் விளையாடாமல் பின்னர்காயத்தில் இருந்து மீண்டும் வரும் ஒரு வீரர் உடனே சிறப்பாக விளையாடுவது கடினமான காரியம். அவரை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் எதிர்பார்த்தால் அது கொஞ்சம் அதிகமானது. இதன் காரணமாக அவர்கள் மீண்டு சிறப்பாக ஆடுவது எதிர்பார்க்கமுடியாத விஷயம். எனவே அவர்களுக்கு நான் தேர்ந்தெடுக்கும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories