கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஈழத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் சென்னை அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த ஆட்டங்களை காயம் காரணமாக அவர் தவறவிட்டார்.
எனினும் அவர் காயம் குணமடைந்து சென்னை அணிக்காக எஞ்சிய போட்டிகளில் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் முடியும் முன்னறே இங்கிலாந்து திரும்பினார்.
அதன்பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், மற்றும் ஆஷஸ் தொடரில் அவர் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்காக களமிறங்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தனது காலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்காக காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின்னர் அடுத்த அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் சென்னை அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்காவிட்டால் அடுத்த நடைபெறும் மினி ஏலத்தில் சென்னை அணிக்கு பென் ஸ்டோக்ஸ்க்கு கொடுத்த 16 கோடியே 25 லட்சம் ரூபாயை பயன்படுத்தி முக்கிய வீரர்களை எடுக்க கூடிய வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.