விளையாட்டு

" எனக்கு அது செட் ஆகவில்லை, அதை சொல்ல அசிங்கப்படமாட்டேன்" -இந்திய வீரர் சூர்யகுமார் கூறியது என்ன ?

நான் ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொள்வதற்கு அசிங்கப்பட தேவையில்லை என சூர்யகுமார் கூறியுள்ளார்.

" எனக்கு அது செட் ஆகவில்லை, அதை சொல்ல அசிங்கப்படமாட்டேன்"  -இந்திய வீரர் சூர்யகுமார் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

மேலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தால் டி20 தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்து சூரியகுமார் யாதவ் அசத்தியுள்ளார். ஆனால், டி20 போட்டிகளில் ஜொலிக்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கூட அவர் கடுமையாக சொதப்பினார்.

" எனக்கு அது செட் ஆகவில்லை, அதை சொல்ல அசிங்கப்படமாட்டேன்"  -இந்திய வீரர் சூர்யகுமார் கூறியது என்ன ?

இந்த நிலையில், நான் ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொள்வதற்கு அசிங்கப்பட தேவையில்லை என சூர்யகுமார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்திய அணி அதிகமான டி20 ஆட்டங்களில் ஆடுகிறது. இதனால் டி20 போட்டி இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.ஆனால் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் ஒருநாள் போட்யி சற்று சவாலாகவே உள்ளது'.

ஒருநாள் போட்டியில் சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.உதாரணமாக ஒருநாள் போட்டியில் விக்கெட் விரைவாக வீழ்ந்துவிட்டால், நாம் மிடில் ஆர்டரில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் பொறுமையாக விளையாட வேண்டும்,போட்டியின் இறுதி கட்டத்தை நெருங்கும்போது டி20 யை விளையாடுவது போல் விளையாட வேண்டும். நான் ஒருநாள் போட்டியில் மிக மோசமாக செயல்பட்டுள்ளேன்.இதை சொல்வதற்கு அசிங்கப்பட தேவையில்லை.இதில் நேர்மையாக இருப்பது அவசியம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories