விளையாட்டு

மீண்டும் அடுத்த ஆண்டு வெளிநாட்டில் IPL தொடர்.. வெளிவந்த தகவல்.. BCCI-யின் இந்த முடிவுக்கு காரணம் என்ன ?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை வேறொரு நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அடுத்த ஆண்டு வெளிநாட்டில் IPL தொடர்.. வெளிவந்த தகவல்.. BCCI-யின் இந்த முடிவுக்கு காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்திய நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை வேறொரு நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அடுத்த ஆண்டு வெளிநாட்டில் IPL தொடர்.. வெளிவந்த தகவல்.. BCCI-யின் இந்த முடிவுக்கு காரணம் என்ன ?
Ron Gaunt

அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க அரசால் முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே நேரம், ஜூன் மாதத்தில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இரண்டு வாரங்கள் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மே மாத பாதியிலே நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. எனினும் பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில்தான் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதற்கு முன்பு பட்டது ப் 2009ம் ஆண்டு தேர்தலின் போது ஐபிஎல் தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது என்பதும் 2014-ம் ஆண்டு பாதி ஐபிஎல் தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories