இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
தற்போது தோனிக்கு 41 வயதாகும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஜடேஜாவை சென்னை அணி கேப்டனாகிய நிலையில், அந்த சீசனில் சென்னை அணி மிகவும் மோசமாகி செயல்பட்டது. இதனால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்டை தயார்படுத்தும் பணியை தோனி ஏற்கனவே தொடங்கிவிட்டார் என சென்னை அணி வீரர் ராயுடு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " தோனிக்கு 42 வயதாகினாலும் அவர் நினைக்கும் வரை அவர் சென்னை அணியில் விளையாடலாம். ஆனாலும், ஐபிஎல் ஏலத்தின் போது தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.
எனினும் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்டை தயார்ப்படுத்தும் பணியை தோனி ஏற்கனவே தொடங்கிவிட்டார். இளம் வயதிலேயே அணியின் முக்கிய வீரராக அவர் திகழ்கிறார். அதை போல அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளும் வீரராக உள்ளார். அவருக்கு 26 வயது மட்டுமே ஆவதால், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் நிச்சயம் அடுத்த கேப்டனாக ருதுராஜ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது" எனக் கூறியுள்ளார்.