விளையாட்டு

மோதலுக்கு பாகிஸ்தான் தயார்.. ஆனால் இந்தியா தயாராக இல்லை ! - பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கூறியது என்ன?

இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார்.

மோதலுக்கு பாகிஸ்தான் தயார்.. ஆனால் இந்தியா தயாராக இல்லை ! - பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.

இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.

மோதலுக்கு பாகிஸ்தான் தயார்.. ஆனால் இந்தியா தயாராக இல்லை ! - பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் கூறியது என்ன?

ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டது.

அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாவித் மியான்தத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு என இரு முறை இந்தியாவிற்கு வந்து விளையாடியது. இதனால் அடுத்தமுறை இந்திய அணி இங்கு வருவதுதான் சரியாக இருக்கும். ஆனால் அதற்கு பிசிசிஐ தயாராக இல்லை. அதேநேரம் நாம் எப்போதும் இந்தியாவுடன் எங்கும் விளையாடத் தயாராக இருக்கிறோம். கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கும் விளையாட்டு. ஆனால் இந்தியா இதையெல்லாம் மனதில் வைத்து நடந்து கொள்ளவில்லை." என பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories