விளையாட்டு

"சிறுவயதில் இருந்தே CSK-வை பார்த்து வளர்ந்தாலும் இதுவே என் அணி" -இளம்வீரர் சாய் சுதர்சன் கூறியது என்ன ?

"சிறுவயதில் இருந்தே CSK-வை பார்த்து வளர்ந்தாலும் இதுவே என் அணி" -இளம்வீரர் சாய் சுதர்சன் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை ஆடினர். அதிலும், இவர்கள் அதிரடியால் தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணிக்கு எதிராக உலகசாதனை படைத்தது.

அந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்து முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்தது. இந்த தொடரில் சாய் சுதர்சன் 3 சதங்களோடு 610 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடம் பிடித்தார்.

"சிறுவயதில் இருந்தே CSK-வை பார்த்து வளர்ந்தாலும் இதுவே என் அணி" -இளம்வீரர் சாய் சுதர்சன் கூறியது என்ன ?

அதோடு ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் சாய் சுதர்சன் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது. இதனால் இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பான ஆடிய அவர் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் அவர் களமிறங்கினார்.

"சிறுவயதில் இருந்தே CSK-வை பார்த்து வளர்ந்தாலும் இதுவே என் அணி" -இளம்வீரர் சாய் சுதர்சன் கூறியது என்ன ?

சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 12 பந்துகளுக்கு 10 ரன்கள் என ஆரம்பத்தில் அவ்வளவு மெதுவாக தொடங்கியவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியைத் தொடங்கினார். அதிலும் தீக்க்ஷனா பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர் அடித்து அசத்தினார். தொடர்ந்து 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து சரவெடியாக வெடித்த அவர், 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், மைதானமே அவரின் இந்த ஆட்டத்தை எழுந்து நின்று பாராட்டியது. இந்த அபார ஆட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"சிறுவயதில் இருந்தே CSK-வை பார்த்து வளர்ந்தாலும் இதுவே என் அணி" -இளம்வீரர் சாய் சுதர்சன் கூறியது என்ன ?

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்ததும் சென்னை வந்த சாய் சுதர்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " என்னைப் போன்ற அனைவருக்கும், சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் என்னை ஏலத்தில் எடுத்த குஜராத் அணிதான் எனது அணி. அந்த அணியில் தொடர்ந்து விளையாடுவேன், ஆனால் சிறு வயதில் இருந்து, சென்னை கிரிக்கெட் அணியை பார்த்து வளர்ந்தவன் நான் என்பதை மறுக்க முடியாது.

நான் குஜராத் அணிக்காக அஹமதாபாத்தில் விளையாடினாலும், எனக்கு அங்கும் தமிழர்கள் தொடர்ந்து ஆதரவளித்தனர். சிறிய வயதில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மைக் ஹசியின் பேட்டிங்கை ரசித்துள்ளேன். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன். அவரைப் போன்று நான் வரவேண்டும் என்பதே என் ஆசை" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories